Home இலங்கை செய்திகள் அஸ்வெசும தொடர்பில் வெளியான பெருமகிழ்ச்சி தகவல்..!

அஸ்வெசும தொடர்பில் வெளியான பெருமகிழ்ச்சி தகவல்..!

ஜூன் மாதம் முதல் அஸ்வெசும நிவாரணப் பலன்களின் எண்ணிக்கை 24 லட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, அஸ்வெசும திட்டத்திற்காக தவறான தகவல்களை வழங்கிய 7,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர், இதனை குறிப்பிட்டார்.

 

அவ்வாறு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால், சட்டத்தின் பிரகாரம் குறித்த நபர்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.