Home இலங்கை செய்திகள் இலங்கையை உலுக்கிய மற்றுமொரு கோர விபத்து-மூவர் பலி..!

இலங்கையை உலுக்கிய மற்றுமொரு கோர விபத்து-மூவர் பலி..!

பொத்துஹெர, பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மரக்கறி போக்குவரத்து லொறியுடன் எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி பொத்துஹெர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.