உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை ரயிலின் சாரதியும் உதவியாளரும் பார்த்துக்கொண்டிருந்தனர். இதுவே விபத்துக்கு காரணமாக இருந்துள்ளது.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 300 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலொன்றில் கருத்து வெளியிட்ட அஸ்வினி வைஷ்ணவி,
உலகக் கிண்ணப் போட்டியை பார்த்துக்கொண்டே இவர்கள் ரயில்களை இயக்கியுள்ளனர். இதனாலேயே விபத்து நேர்ந்துள்ளது.
எதிர்காலத்தில் ரயில் சிக்னல்களை சரியாக அடையாளம் காணும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. என்றார்.
கடந்த மாதம், ஓட்டுநர் இல்லாமல் ரயில் ஒன்று சுமார் 40 கிலோமீட்டர் தூரம் ஓடிய சம்பவம் இந்தியாவில் பெரும் பரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்காக நிலைய அமைச்சர் உள்ளிட்ட மூவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.