வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை வீதியில் அமைந்திருக்கும் மாதா சொரூப வளாகம் காதலர்களின் நினைவுச் சின்னமாக மாறுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாவாசிகளை கவரக்கூடிய இடமாக காணப்படும் தாளையடி கடற்கரை பகுதிக்கு அண்மைக்காலமாக அதிகளவான உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்து தங்களது பொழுதை கழித்து சென்றனர்.
தாளையடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள மாதா சொரூப வளாகத்தை சிலர் களியாட்ட இடமாக அண்மைக்காலமாக மாற்றிவருவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுவந்த நிலையில் பல அசம்பாவிதங்களும் இடம்பெற்றுள்ளது.
இதற்கு சாட்சியாக மாதா சொரூபம் அமைந்துள்ள கட்டடத்தில் காதல் வசனங்கள், காதலர்களுடைய பெயர்கள் எழுதப்பட்டு தூய்மையான அவ்விடம் அசுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
உரியவர்கள் உடனடியாக விரைந்து தக்க நடவடிக்கை எடுத்து மாதா சொரூபம் அமைந்துள்ள குறித்த வளாகத்தை இறை பக்தியுடைய இடமாக மாற்றியமைக்குமாறு பிரதேச மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.