Home இலங்கை செய்திகள் சஜித்தைக் கொல்ல சதி!

சஜித்தைக் கொல்ல சதி!

எதிர்க்கட்சித் தலைவரின் உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் போது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் இன்று (8) தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவின் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசுவதை தான் பார்த்ததாக கூறிய கிரியெல்ல, அதிர்ஷ்டவசமாக தோட்டா தனது காலில் விழுந்ததாக தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ஆற்றிய உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியதாவது:

ஜனாதிபதியின் சிம்மாசன உரையிலிருந்து நாங்கள் எழுந்து சென்றுவிட்டோம். எங்கள் ஆதரவு தேவைப்பட்டால், எங்களுக்கு மரியாதை தேவை, எங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் வழங்கப்படவில்லை, எங்கள் அமைதியான போராட்டம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட பகுதிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெற்றோம்.

எங்களை அடித்துவிட்டு ஆதரவு கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா?ஆதரித்தால் நாங்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாது. எதிர்க்கட்சிகளின் ஆதரவும் இப்படித்தான் கிடைக்கிறது- என்றார்.