மரணமடைந்த சாந்தனின் இளவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு அவரது 21 வது வயதில் குறித்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
உடல்நல குறைவு காரணமாக இந்தியா – சென்னையில் உயிரிழந்த சாந்தனின் உடல் இன்று (04) இரண்டாவது நாளாக உடுப்பிடியில் உள்ள அவரது வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சாந்தனின் பூதவுடல் இன்றைய தினம் (04) யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.