Home இலங்கை செய்திகள் தகராறு முற்றியதில் கணவனை ஒரே போடாய் போட்ட மனைவி கைது..!

தகராறு முற்றியதில் கணவனை ஒரே போடாய் போட்ட மனைவி கைது..!

கரந்தெனிய – குருபேபில பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

 

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இன்று (03) அதிகாலை வீட்டினுள் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

உயிரிழந்தவர் 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

 

கொலையை செய்த பெண்ணை கரந்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், பல தடவைகள் கரந்தெனிய பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.