Home இலங்கை செய்திகள் தாய்லாந்துப் பிரதமர் இலங்கை வருகை..!

தாய்லாந்துப் பிரதமர் இலங்கை வருகை..!

தாய்லாந்து பிரதமர் Srettha Thavisin உத்தியோகபூர்வ விஜயமாக இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளார்.

கொழும்பு காலிமுகத்திடலில் நாளை நடைபெறவுள்ள இலங்கையின் 76 வது தேசிய சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்காகவே, தாய்லாந்து பிரதமர் இலங்கை வந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை, பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

தாய்லாந்து பிரதமரின் இந்த விஜயத்தின் போது, இலங்கை-தாய்லாந்து இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை, இலங்கை மணிக்கக்கல், ஆபரண ஆராய்ச்சி  பயிற்சி நிறுவனத்திற்கும் தாய்லாந்து மாணிக்கக்கல் மற்றும் ஆபரண நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை என்பன கைச்சாத்திடப்பட உள்ளன.

இதனிடையே தாய்லாந்துப் பிரதமர் நாளை மதியம் கொழும்பு கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள திபதுத்தாராம தாய் ராஜமஹா விகாரைக்கும் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.