Home இலங்கை செய்திகள் நல்ல வெறியில் அலரிமாளிகைக்குள் குதித்தவர்களுக்கு நேர்ந்த கதி..!

நல்ல வெறியில் அலரிமாளிகைக்குள் குதித்தவர்களுக்கு நேர்ந்த கதி..!

கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொறியியலாளராக பணிபுரியும் ஒருவரும், வணிக கடலோடியாக பணிபுரியும் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரவு விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு கூகுள் மேப் மூலம் அலரிமாளிகை கட்டட சுவர் வழியாக குதித்துள்ளனர்.

இதன்போது, ​​பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரையும் கைது செய்து கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.