மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 20 அடி குறைந்து உள்ளது.அதே போல் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 10 அடி குறைந்து உள்ளது.
மேல் கொத்மலை கென்யோன்,லக்சபான, பொல்பிட்டிய,கலுகல, விமலசுரேந்திர, நவலக்சபான, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
தொடர்ந்து இப் பகுதியில் கடுமையான வெப்பம் நிலவுவதால் சகல நீர் தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் குறையும்.
பெருந்தோட்ட பகுதிகளில் பாரிய அளவில் சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.