மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜாவை அவரது அலுவலகத்தில் வைத்துச் சந்தித்து, சமகால விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடிய இந்தக் குழுவினர் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களுடன் அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பிலும் விளக்கமளித்ததோடு. இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க பதிலளித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் மத்திய வங்கி ஆளுநரோடு, மத்திய வங்கியின் பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் வட பிராந்திய முகாமையாளர் உட்பட எட்டுப் பேர் கலந்து கொண்டனர்.