ரயிலில் மோதி 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (29) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயில், இளைஞன் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.