வவுனியாவில், கணவனால் கைவிடப்பட்ட நிலையில் நிர்கதிக்குள்ளான இளம் தாய் மற்றும் விசேட தேவையுடைய 07 வயது மகன் ஆகியோர் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்தது.
இந்த முறைப்பாடு தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் ஆராய்ந்து வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய அபயம் பிரிவினரால், வவுனியா பிரதேச செயலாளருக்கு தகவல் வழங்கப்பட்டது.
உடனடியாக செயற்பட்ட வவுனியா பிரதேச செயலாளர், குறித்த சிறுவனையும், இளம் தாயையும் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். சமூக நலன் விரும்பி ஒருவரால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் அபயம் பிரிவினர் துரித நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது