Home Trincomalee news “அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை” என்ற உலக சாதனை சிறுமிக்கு கெளரவம்.

“அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை” என்ற உலக சாதனை சிறுமிக்கு கெளரவம்.

“அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை” என்ற உலக சாதனைக்கான சர்வதேச சாதனை புத்தகத்தால் விருது வழங்கப்பட்ட
2 வருடமும் 10 மாதமும் நிரம்பிய சிறுமி தாரா பிரேம்ராஜ் இற்கு திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் பாராட்டு நிகழ்வொன்று இடம்பெற்றது.

ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்த பாராட்டினை வழங்கியதுடன் அச்சிறுமிக்கு நினைவு சின்னம் மற்றும் பரிசில் களையும் ஆளுநர் வழங்கி வைத்தார்.

மேலும் இந்த சாதனைக்காக கடுமையாக உழைத்த அவர்களது பெற்றோர்களும் இங்கு பாராட்டப்பட்டனர்

(எஸ்.அஷ்ரப்கான்)