இங்கிலாந்து மன்னர் சார்ள்ஸ் ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெர்க்கிங்ஹம் அரண்மனை தெரிவித்துள்ளது.
அவரின் புற்றுநோயின் வகை வெளிப்படுத்தப்படாததுடன் குறித்த விடயமானது அவரது சமீபத்திய சிகிச்சையின் போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மன்னர் திங்களன்று ’வழக்கமான சிகிச்சையை’ தொடங்கினார் எனவும், மேலும் சிகிச்சையின் போது பொதுக் கடமைகளை ஒத்திவைப்பார் என்றும் அரண்மனை தெரிவித்துள்ளது.
புற்றுநோயின் நிலை அல்லது முன்கணிப்பு பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் பகிரப்படவில்லை.