Home jaffna news உதயசூரியன் உள்ளூர் வெற்றிக்கிண்ணம் லைட்டிங் Boys வசம்…! {படங்கள்}

உதயசூரியன் உள்ளூர் வெற்றிக்கிண்ணம் லைட்டிங் Boys வசம்…! {படங்கள்}

வடமராட்சி கிழக்கு உதய சூரியன் விளையாட்டுக் கழகம் நடாத்திய உள்ளூர் போட்டியின் இறுதி போட்டி இன்று மாலை 3.30மணியளவில் உதயசூரியன் மைதானத்தில் இடம்பெற்றது.

ஈஸ்டன் கிங்ஸ் அணியை எதிர்த்து லைட்னிங் Boys அணியினர் மோதிய இறுதி போட்டியின் பிரதம விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செ.ராமச்சந்திரன் கலந்து கொண்டதோடு சிறப்பு விருந்தினர்களாக வத்திராயன் கிராம அலுவலர்,வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர், வத்திராயன் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,சமுர்த்தி உத்தியோகத்தர் நடுவர் சங்க தலைவர் என பலரும் கலந்து கொண்டனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியின் முடிவில் லைட்னிங் Boys  1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உதயசூரியன் உள்ளூர் போட்டிக்கான கிண்ணத்தை தமதாக்கி கொண்டனர்.

1ஆவது மற்றும் இரண்டாவது  இடத்திற்கான கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்ட அணியினருக்கு பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

உதயசூரியன் உள்ளூர் வெற்றிக்கிண்ணம் லைட்டிங் Boys வசம்...! {படங்கள்}-oneindia news

Exit mobile version