Home வீடியோ செய்திகள் கொழும்பில் கார் மோதி ஆட்டோ சாரதி பலி!! காருக்குள் இருந்த பெண்ணுக்கு விளக்குமாறு பூசை!! (வீடியோ)

கொழும்பில் கார் மோதி ஆட்டோ சாரதி பலி!! காருக்குள் இருந்த பெண்ணுக்கு விளக்குமாறு பூசை!! (வீடியோ)

இரவு விடுதியில் இருந்து திரும்பிய சொகுசு கார் ஒன்று, கொள்ளுப்பிட்டி அல்பிரட் மாவத்தைக்கு அருகில் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்j சம்பவம் நேற்று நடந்தது.

விபத்தின் பின்னர், காரை ஓட்டிச் சென்ற நிறுவன இயக்குநர் தப்பிச் சென்றார். அவர் இன்னும் பொலிஸில் சரணடையவில்லை. அந்த காரில் 5 பேர் இருந்துள்ளனர்.

கார்

இந்த விபத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காரில் இருந்த பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளனர். ஏனையவர்கள் தப்பியோடி விட்டனர்.

விபத்தின் போது பம்பலப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு காரில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் இருந்ததாகவும் அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டி முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் மோதியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோதியதன் பின்னர், முச்சக்கரவண்டியின் கார் வீதியை விட்டு விலகி கடை ஒன்றின் மீது மோதியதாகவும், பின்னர் முச்சக்கரவண்டி வீதியில் இருந்து இருபத்தைந்து மீற்றருக்கும் மேலாக முன்னோக்கிச் சென்று நிறுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

https://hiru7.com/%e0percentaepercent87percente0percentaepercentb0percente0percentaepercentb5percente0percentafpercent81-%e0percentaepercentb5percente0percentaepercentbfpercente0percentaepercent9fpercente0percentafpercent81percente0percentaepercenta4percente0percentaepercentbfpercente0percentaepercentafpercente0percentaepercentbfpercente0percentaepercentb2percente0percentafpercent8d-%e0percentaepercent87percente0percentaepercentb0percente0percentafpercent81percente0percentaepercenta8percente0percentafpercent8dpercente0percentaepercenta4percente0percentafpercent81/

 

Exit mobile version