Home Uncategorized சத்திர சிகிச்சை மூலம் குழந்தை!! தாயும் சேயும் உயிரிழப்பு!

சத்திர சிகிச்சை மூலம் குழந்தை!! தாயும் சேயும் உயிரிழப்பு!

மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயொருவர் சிசுவை பிரசவித்த பின்னர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (19) பதிவாகியுள்ளது.

எத்திமலை – கும்புக்கேயா பிரதேசத்தைச் சே​ர்ந்த 28 வயதானவர் என்றும் இவர் தனது இரண்டாவது குழந்தையைப் பி​ரவசித்த போதே, உயிரிழந்தள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பி​ரசவத்துக்காக சியம்பலாண்டுவ ஆரம்ப வைத்தியசாலையில் 18ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட பின்னர் மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்ப்பட்டு, அங்கு சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிரசவித்து சிறிது நேரத்தின் பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதுடன் தீவிர சிகிச்சைப் ​பிரிவில் அனுமதிக்கப்பட்ட தாயும் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version