மறைந்த சாந்தன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான சாந்தன் அவர்கள் சுகயீனம் காரணமாக கடந்த 28ஆம் திகதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவரது சடலம் நேற்றையதினம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்னமும் உடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவில்லை.