Home இலங்கை செய்திகள் சிவனடி பாத மலைக்கு குடும்பத்துடன் தரிசிக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்..!

சிவனடி பாத மலைக்கு குடும்பத்துடன் தரிசிக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்..!

சிவனடி பாத மலையில் தரிசனம் செய்து விட்டு திரும்புகையில் கடும் சுகவீனம் முற்ற நபர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் மரணமாகியுள்ளார்.

அவிஸ்சாவலை தெஹியோவிற்ற பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த குடும்பம்,
நேற்று இரவு 10 மணிக்கு சிவனடி பாத மலைக்கு சென்று திரும்பும் வேளையில் குடும்ப தலைவர் டபிள்யூ.குணவர்தன 78 வயது உடைய நபர் கடும் சுகவீனம் உற்ற நிலையில் அங்கு இருந்து அவசர அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வர பட்டு அங்கு அனுமதிக்க பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து உள்ளார்.

என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் இறந்த டபிள்யூ.குணவர்தனவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க பட உள்ளது என தெரிவித்தார்.

Exit mobile version