Home இலங்கை செய்திகள் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் – ஐவருக்குத் தடை.!

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் – ஐவருக்குத் தடை.!

சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என 5 பேருக்கு பொலிஸாரால் தடை பெறப்பட்டுள்ளது.

இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தினை கட்டுப்படுத்தும் வகையில் இத் தடை உத்தரவு பொலிஸாரால் பெறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயற்பாட்டாளர்களான லீலாதேவி, கலாரஞ்சினி, கோகிலவாணி மற்றும் சிவில் செயற்பாட்டாளர் ஒருவர் அடங்கலாக ஐவருக்கு எதிராகவே தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நீதிமன்றில் குறித்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து, ஒலி மாசுபடல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி குறித்த தடை பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆயினும், திட்டமிடப்பட்ட வகையில் குறித்த போராட்டம் இரணைமடு சந்தியில் 9 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version