Home இலங்கை செய்திகள் செல்வம் எம்.பி.யின் தாயாரின் உடல் இன்று நல்லடக்கம்

செல்வம் எம்.பி.யின் தாயாரின் உடல் இன்று நல்லடக்கம்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலையின் இறுதி நல்லடக்கம் இன்று புதன்கிழமை மதியம் இடம் பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலையின் தனது 84 ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை காலமானார்.செல்வம் எம்.பி.யின் தாயாரின் உடல் இன்று நல்லடக்கம்-oneindia news

இந்த நிலையில் அவரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றன.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,உள்ளடங்கலாக பல ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து பூதவுடல் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு தோட்டவெளி ஜோசப் வாஸ் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு விடத்தல் தீவு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version