Home jaffna news திருநெல்வேலியில் புதிர்ப்பொங்கல்.!

திருநெல்வேலியில் புதிர்ப்பொங்கல்.!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி கிழக்கு வாலை அம்மன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் தைப்பூச தினத்தினை முன்னிட்டு புதிர் எடுக்கும் பொங்கல் விழா நிகழ்வு நேற்று (03.02.2024) சனசமூக நிலையத்தின் முன்றலில் இடம்பெற்றது.
திருநெல்வேலியில் புதிர்ப்பொங்கல்.!-oneindia news


இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்னிந்திய திரைப்பட இயக்குனரும், அரசியல்வாதியும், நடிகை ரோஜாவின் கணவரும் ஆகிய ஆர்.கே.செல்வம் கலந்துகொண்டார்..

இதில் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி கிழக்குப் பகுதியில் தமது விவசாய வயல் நிலங்களில் உற்பத்தியாகிய நெல்மணிகளை அறுவடை செய்து புத்தரிசியாக்கி  32 பானைகள் வைத்து யாழ்ப்பாணம் – திருநெல்வேலி கிழக்கு பகுதி மக்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். கலை, கலாசார நிகழ்வுகளும், வினோத விளையாட்டுகளும் இதன்போது இடம்பெற்றன.

இதில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி கிழக்கு சமூக அமைப்பினரும் அப்பகுதிவாழ் மக்களும் கலந்துகொண்டனர்.

 

Exit mobile version