Home இலங்கை செய்திகள் நயினை பத்திரகாளியின் பூந்தண்டிகை ஊர்வலம்..!{படங்கள்}

நயினை பத்திரகாளியின் பூந்தண்டிகை ஊர்வலம்..!{படங்கள்}

 

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப் பெருமாள் தேவஸ்தானத்தின் ஐந்தாம்திருவிழாவின்
பூந்தண்டிகைத் திருவிழா 19.02.2024 அன்று மாலை சிறப்பாக இடம்பெற்றது.
இவ் தேவஸ்தானத்தின் திருவிழா கடந்த 15.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், எதிர்வரும் 23.02.2024 அன்று இரதோற்சவமும், மறுநாள் தீர்த்ததோற்சவமும் இடம்பெற்று, அன்று மாலை கொடியிறக்கத்துடன் மஹோற்சவம் இனிதே நிறைவடையும்.
இவ் ஹோற்சவத்தினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் தலை மையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்.
பூந்தண்டிகை மஹோற்சவத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டதுடன் இராபோசன அன்னதானத்திலும் பங்குகொண்டனர்.
நயினை பத்திரகாளியின் பூந்தண்டிகை ஊர்வலம்..!{படங்கள்}-oneindia news
Exit mobile version