பதியத்தலாவ பொலிஸ் பிரிவில் வாகன சேவை நிலையத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 16ஆம் திகதி பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என நேற்று (17) பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.
அந்த முறைப்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், இறந்தவர் பணிபுரிந்த வாகன சேவை நிலையத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் அவரது செருப்பு இருந்ததால், கிணற்றை ஆய்வு செய்ததில் அந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்தவர் ஹரஸ்கல – மஹாஓய பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பதியத்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.