Home இலங்கை செய்திகள் மட்டக்களப்பில் குண்டு வெடிப்பு-ஒருவருக்கு நேர்ந்த கதி..!

மட்டக்களப்பில் குண்டு வெடிப்பு-ஒருவருக்கு நேர்ந்த கதி..!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்பு அமைந்துள்ள வீடு ஒன்றில் குப்பைக்குள் இருந்து குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (07) பகல் 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பொலிஸ் நிலையத்துக்கு முன்பு அமைந்துள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் சம்பவ தினமான இன்று பகல் காணியை துப்பரவு செய்து அதன் குப்பைகளை தீயிட்டு எரித்துக் கொண்டிருந்த போது அதில் இருந்த கைக்குண்டு ஒன்று பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடப்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version