Home இலங்கை செய்திகள் மலையகத்தில் காணாமல் போன பாலசுந்தரம் காலையில் சடலமாக மீட்பு..!

மலையகத்தில் காணாமல் போன பாலசுந்தரம் காலையில் சடலமாக மீட்பு..!

நோர்வூட் பகுதியில்  ஆணொருவரின் சடலம் இன்று(04) காலை மீட்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னதரவளை தோட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் நேற்று(03) மாலை முதல் காணாமல் போயிருந்தார்.

 

இது தொடர்பில் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

 

இதற்கமைய காணமல் போன நபரை தேடி தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 

இவ்வாறானதொரு நிலையில், குறித்த தோட்டப் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு அருகிலிருந்து குறித்த நபரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

Exit mobile version