முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான சோதிடரான ஞானா அக்கா எனும் பெண் மீண்டும் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய விரட்டியடிக்கப்பட்ட பின்னர், ஞான அக்காவுக்குச் சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடு தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், சிறிது காலம் தலைமறைவாக இருந்தார்.
எனினும், தற்போது மீண்டும் சோதிடம், சாந்தி கர்மம் போன்றவற்றில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில அரசியல்வாதிகளும், பொலிஸ் உயர் அதிகாரிகளும் தமது எதிர்கால இலக்குகளை அடைவதற்காக ஞான அக்காவைக் கொண்டு யாகமொன்றை மேற்கொள்ள கடந்த ஒரு மாத காலமாக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.