Home இலங்கை செய்திகள் மீண்டும் வரிசை யுகமா-வெளியான அதிர்ச்சி தகவல்..!

மீண்டும் வரிசை யுகமா-வெளியான அதிர்ச்சி தகவல்..!

வேலை நிறுத்தம் நிறுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் வரிசையில் நிற்கும் யுகத்திற்கு செல்லும் அபாயம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொலன்னறு மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,  விவசாயிகள், தனியார் துறையில் பணிபுரிபவர்கள், உழைத்துச் சம்பாதித்த பணத்தில், பொதுத்துறையில் உள்ள அனைவருக்கும் சம்பளம் கொடுக்கின்றனர்.

அரச துறையில் இருப்பவர்கள் விவசாயிகளுக்காகவும், தனியார் நிறுவனங்களுக்காகவும் செயல்பட வேண்டிய கடமை உள்ளது.

மேலும் வங்குரோத்து நாட்டில் நடக்கும் வேலைநிறுத்தங்களை உலகம் முழுவதும் ஊடகங்கள் காட்டும் போது, ​​இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைகிறது.

Exit mobile version