Home jaffna news யாழில் ஐஸ் போதைப்பொருள் பாவனையால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

யாழில் ஐஸ் போதைப்பொருள் பாவனையால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் ஐஸ் போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (31) இரவு நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து அப் பகுதியைச் சேர்ந்த குணாராசா தனுஷன் (25 வயது) என்பவரது சடலம் மீட்கப்பட்டது.

பின்னர் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையின் போது ஐஸ் போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

Exit mobile version