Home jaffna news யாழில் தனிமையில் சென்ற பெண்ணை தாக்கிவிட்டு நகைகளை பறித்து சென்ற மர்மகும்பல்

யாழில் தனிமையில் சென்ற பெண்ணை தாக்கிவிட்டு நகைகளை பறித்து சென்ற மர்மகும்பல்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இன்று திங்கட்கிழமை மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

ஒரு பவுண் காப்பும் அரைப் பவுண் மோதிரமும் கொள்ளையடித்துச் செல்லப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

தனிமையில் சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பெண் அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்று தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது மழைக்கவச அங்கி மூலம் உடலை முற்றாக மூடி முச்சக்கரவண்டியொன்றில் வந்த மர்ம நபரொருவர் பெண்ணை தாக்கிய நிலையில் இருவரும் பெண் அணிந்திருந்த நகைகளை பறித்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version