யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்திப் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை(19) இரவு இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த சம்பவம் தொடர்பாக நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.