Home jaffna news யாழில் மோட்டாரில் பயணித்த இளைஞனுக்கு காத்திருந்த பயங்கரம்..!

யாழில் மோட்டாரில் பயணித்த இளைஞனுக்கு காத்திருந்த பயங்கரம்..!

வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி, அவரது மோட்டார் சைக்கிளை கும்பலொன்று கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை வழியே மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞரை, அரியாலை பகுதியில் ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது.

அவ்வேளை, மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்திவிட்டு இளைஞர் கும்பலிடமிருந்து  தப்பியோடியுள்ளார்.

அதன் பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட கூட்டத்தினர் அங்கிருந்த இளைஞரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version