Home jaffna news வடமராட்சி கிழக்கில் மீண்டும் சட்டவிரோத சுருக்குவலை தொழில்.!

வடமராட்சி கிழக்கில் மீண்டும் சட்டவிரோத சுருக்குவலை தொழில்.!

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை தொழில் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

சிறுகண் உடைய வலையை பயன்படுத்தி பல படகுகள் உதவியுடன் ஒளி பாய்ச்சி பல்லாயிரக்கணக்கான குஞ்சு மீன்களை பிடித்து அழிப்பதாகவும் இதனால் சிறுதொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்தவருடம் சுருக்குவலை தொழில் மேற்கொண்டோர் கைது செய்யப்பட்ட போதும் ஒரு சிலர் இன்றும் சுதந்திரமாக சட்டவிரோத சுருக்குவலை தொழிலை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட படகுகள் கடலில் ஒளிபாய்ச்சி சுருக்குவலை மூலம் ஒரு நாளில் பல்லாயிரக்கணக்கான மீன்களை பிடித்து அழித்தால் தாம் வாழ்வதற்கு என்ன செய்வது என்றும்
இது தொடர்பாக மீன்பிடி அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சட்டவிரோத சுருக்குவலை தொழிலை தடுத்து நிறுத்தி சிறு தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.
வடமராட்சி கிழக்கில்  மீண்டும்  சட்டவிரோத சுருக்குவலை தொழில்.!-oneindia news

Exit mobile version