Home இலங்கை செய்திகள் வியாழேந்திரனை கிழித்து தொங்கப்போட்ட லவக்குமார்..!

வியாழேந்திரனை கிழித்து தொங்கப்போட்ட லவக்குமார்..!

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் மட்டக்களப்பு கரடியனாறு பாடசாலை ஒன்றில்  இலவச சீருடை வழங்கும் நிகழ்வினை தமது அரசியல் மேடையாக பயன்படுத்தியமை கண்டிக்கத்தக்க விடயம் என சிவில் சமூக செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமார் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஊடக மன்றம் வாழைச்சேனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இது தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

இலவச சீருடை என்பது அரசினால் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதாகும்.இதனை தான் வழங்கவது போல் பாடசாலைகளில் ஒரு சில அதிபர்களின் ஆதரவுடன் இணைந்து செயற்படுவதும் மாணவர்களை காலில் விழ வைப்பதும் விரும்பதத்தகாத விடயமாகும்.

ஆங்கிலேயர் காலத்தில் அடிமைத்தனத்தில் இருந்தது போன்று சீருடை பெற்றுக் கொள்வதற்காக மாணவர்களை காலில் விழ வைத்து இராஜங்க அமைச்சர் தமக்குரிய விளம்பரத்தை தேடிக் கொள்கிறார்;.

இவ்வாறான நிகழ்வுகள் மாவட்டத்தில் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.குறித்த செயற்பாட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட கல்விப்பணிப்பாளர்,அதிபர் ஆகியோர்களுக்கு ஒழுங்காற்று விசாரணை எடுக்கப்பட வேண்டிதுடன்ஆசிரியர் சங்கங்கள் இதில் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டும் அத்துடன் மக்கள் இவர் போன்றவர்களின் மாயாஜால வித்தைகளை அடையாளம் கண்டு விழிப்பாக செயற்பட வேண்டும் என்றார்.

மாணவர்கள் எதிர்கால புத்தி ஜீவிகளாகவும் கல்விமான்களாகவும் உருவாக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்

Exit mobile version