சிறுவர் விளையாட்டு பொருட்களுக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 100 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களை இலங்கை சுங்கம், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (PNB) இணைந்து கைப்பற்றப்பற்றியுள்ளன.
அதன்படி, கடந்த சில வாரங்களாக யாரும் கோராத பல பார்சல்களை இலங்கை சுங்கம், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (PNB) இணைந்து தபால் திணைக்களத்தில் பணிபுரிபவர்கள் முன்னிலையில் ஆய்வு செய்த போதே மேற்படி போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன .