இன்று (01) அதிகாலை வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
பாதுக்க மாதுலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இவ்வாறு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வீட்டில், பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள வேறொரு காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்பதற்காக குறித்த குழுவினர் குறித்த வீட்டில் தங்கியிருந்ததாகவும், அந்த வீட்டை கொள்வனவு செய்வதற்கு தயாராகி வருவதாகவும் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் பீதியடைந்த அவர்கள் வீட்டின் சமையலறைக்கு ஓடி ஒளிந்து கொண்டு பின்னர் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்கியதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.