Home இலங்கை செய்திகள் வீட்டில் கணவன் பிள்ளைகள் இருக்கையிலே-மனைவிக்கு நடந்த பயங்கரம்..!

வீட்டில் கணவன் பிள்ளைகள் இருக்கையிலே-மனைவிக்கு நடந்த பயங்கரம்..!

வெட்டுக்காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (17) இரவு 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரகல்ல – கலவிலவத்த பகுதியைச் சேர்ந்த எஸ்.ஷிராணி லக்ஷிகா குமாரி என்ற 47 வயதுடைய பெண்ணே உயிரிழந்ததார்.

உயிரிழந்த பெண் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் கிடந்ததாகவும், அவர் பேருவளை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, பொலிஸாரின் விசாரணைகளின் போது, ​​வீட்டின் படுக்கையறை, நடைபாதை மற்றும் வீட்டின் முன் கதவுகளுக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் போது உயிரிழந்த பெண்ணின் கணவர், மகன் மற்றும் மகள் ஆகியோர் வீட்டில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், வீட்டின் முன் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் படுகாயமடைந்த தமது தாயை வைத்தியசாலையில் அனுமதித்ததாக அவர்கள், பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

தற்போது கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளிடமும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மர்ம கொலையை வீட்டில் உள்ளவர் செய்தார்களா? அல்லது வெளியில் இருந்து வந்தவர்கள் செய்வார்களா? என்ற கோணத்தில் பொலிஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.