ராஜஸ்தானின், அஜ்மீரின் ராம்சார் கிராமத்தில் சுமார் 185 பேர் ஒரே குடும்பத்தில் வாழ்கின்றனர். குடும்பத்தின் மூத்த உறுப்பினரான பேர்டிசந்த் என்பவரின் தந்தை கேட்டுக் கொண்டதன்படி, அவர் தனது குடும்பத்தை ஒன்றாக வைத்துள்ளார்.
சுமார் ஆறு தலைமுறைகளாக ஒன்றாக வசிக்கும் இந்தக் குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருந்தாலும் அனைத்தையும் தங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்கிறார்கள்.
தங்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து தானியங்கள் மற்றும் காய்கறிகளை பயிரிடுகின்றனர்.
185 பேருக்கு மூன்று வேளையும் சமைப்பது என்பது மிகவும் கடினமான வேலை. அதனால் அதிகாலை நான்கு மணியிலிருந்தே இந்த வீட்டில் சமையல் தொடங்கிவிடுமாம்.
இங்கே 13 அடுப்புகளில் உணவு சமைக்கப்படுகிறது.
தினசரி 40 கிலோ காய்கறிகளும் 50 கிலோ கோதுமை மாவும் இவர்களுக்கு உணவுக்காக தேவைப்படுகிறது.
இவர்களது ஆண்டு வருமானம் 2 கோடி என கூறப்படுகிறது. இந்த குடும்பத்திலுள்ள உறுப்பினர்களுக்கு சொந்தமான 80 பைக்குகள் இந்த வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.