Home Uncategorized 16 வயது சிறுமியை பலமுறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை மற்றும் சகோதரன்

16 வயது சிறுமியை பலமுறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை மற்றும் சகோதரன்

16 வயது சிறுமியை அவரின் தந்தை மற்றும் சகோதரன் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி எலுவன்குளம், ஐலியா கிராமத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் தாய் இளம் வயதிலேயே உயிரிழந்த நிலையில் தனது தந்தை மற்றும் சகோதரருடன் அவர் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

16 வயது சிறுமியை பலமுறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை மற்றும் சகோதரன் - Dinamani news - 16 வயது சிறுமியை

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கள புத்தாண்டுக்கு முந்தைய தினத்தில் தனது தந்தையும் சகோதரனும் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் அன்று முதல் அவர்கள் தன்னை பலமுறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் தந்தைக்கு 53 வயது எனவும் சகோதரனுக்கு 14 வயது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் 16 வயது சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வனாத்தவில்லுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://tamiliz.com/infinix-zero-30-5g-5g/