Home இலங்கை செய்திகள் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பிடிபட்டன

7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பிடிபட்டன

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் நேற்று இரவு படகுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பிடிபட்டன-oneindia news

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மரைன் பொலிசார் பெரிய பட்டினம் கடற்கரையில் வைத்து ஒரு நாட்டுப் படையும் அதிலிருந்து சுமார் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

வலி நிவாரணி மாத்திரைகளை இலங்கைக்கு கடத்தி சென்ற பெரிய பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு, பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.