Home இலங்கை செய்திகள் சிறுநீர் கழிப்பதற்காக மரத்தடிக்கு சென்ற பொலிஸ் பரிசோதகருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

சிறுநீர் கழிப்பதற்காக மரத்தடிக்கு சென்ற பொலிஸ் பரிசோதகருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

மரமொன்றில் சிறுநீர் கழிக்கச் சென்ற பொலிஸ் பரிசோதகர் கடுமையாக தாக்கப்பட்டதாக (பொலிஸ் பரிசோதகர்) ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பம்பலப்பிட்டி பொலிஸ் பரிசோதகர் சிற்றுண்டிச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் உள்ள மரமொன்றின் அடியிலேயே சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார்.

அப்போது சுமார் 6 பேர் கொண்ட பொலிஸ் குழு தம்மை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியதாகவும் அவர்களில் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரும் அடங்குவதாக அடி வாங்கிய பொலிஸ் பரிசோதகரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிரேஷ்ட அதிகாரி தம்மை கடுமையாக குற்றம் சாட்டியதாகவும் பொலிஸ் பரிசோதகர் செய்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் கடந்த 9ம் திகதி இரவு பொலிஸ் சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து சிறுநீர் கழிப்பதற்காக மரத்தடிக்கு சென்றதாக இந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.