Home இலங்கை செய்திகள் கொழும்பு வீடொன்றில் இரு பிக்கு உட்பட மூவர் செய்த காரியம்..!

கொழும்பு வீடொன்றில் இரு பிக்கு உட்பட மூவர் செய்த காரியம்..!

பம்பலப்பிட்டியிலுள்ள பல கோடி ரூபா பெறுமதியான பழைய மூன்று மாடி வீடொன்றின் பூட்டை  உடைத்து உள்நுழைந்து அங்கு தங்கியிருந்தமை  தொடர்பில்  இரு  தேரர்கள் உட்பட மூவரைக்  கைது செய்ததாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாலம்பே பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரியும்  இரு தேரர்கள் உட்பட மூவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு தேரர்கள் உட்பட மூவர் தனது தனது வீட்டின் பூட்டை உடைத்து உள்நுழைந்து  அங்கு பலாத்காரமாக  தங்கியிருப்பதாக  வீட்டின் உரிமையாளர் எனக் கூறிக்கொள்ளும் பெண் ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று இவர்களைக் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.