போட்டி நிறுவனத்தில் சேருவதற்காக பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்த ஊழியருக்கு, கூகுள் நிறுவனம் 300 சதவீத சம்பள உயர்வை வழங்கியுள்ளது.
தற்போது உலகெங்கிலும் செயற்கை நுண்ணறிவு ஒரு பேசுப்பொருளாக உள்ளதோடு அது தொடர்பான நிறுவனங்களும் அதிகரித்துள்ளன.
அதற்கமைய, ‘பெர்ப்லெக்சிடி’ என்ற நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்திய தொழில்நுட்ப கழகத்தின் முன்னாள் மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸால் உருவாக்கப்பட்டிருந்தது.
குறித்த செயற்கை நுண்ணறிவு நிறுவனம் 2022ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்த நிலையில், அந்நிறுவனம் கூகுள் நிறுவனத்திற்கு சவாலாக அமைந்திருந்தது.
இந்நிலையில், பெர்ப்லெக்சிடி நிறுவனத்தில் இணைவதற்காக கூகுள் நிறுவனத்திடம் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்த நிலையிலேயே குறித்த ஊழியருக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம், கடந்த 2023 ஜனவரி மாதத்தில் சுமார் 12,000 ஊழியர்களையும் சில நாட்களுக்கு முன் சுமார் 1,000 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்திருந்தது.
இவ்வாறான சூழ்நிலையில் 300 சதவீத ஊதிய உயர்வு அளித்து ஒருவரை தங்களுடனேயே தக்க வைத்து கொண்டமை ஆச்சரியத்துக்குரிய விடயமாக பலராலும் கருதப்படுகிறது.