Home இலங்கை செய்திகள் இந்திய தூதுவரை சந்தித்தார் தமிழரசு கட்சியின் தலைவர்..!

இந்திய தூதுவரை சந்தித்தார் தமிழரசு கட்சியின் தலைவர்..!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஸ் ஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அழைத்து, யாழ் இந்தியத் துணைத்தூதரகத்தில் நேற்றைய தினம் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரனுக்கு வாழ்த்துரைத்த அவர், கட்சியின் உள்ளக முரண்பாடுகளைக் களைந்து, அடுத்தகட்ட நகர்வுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ் இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் அவர்களும் இணைந்திருந்த இச் சந்திப்பில் ஈழத்தமிழர் நலன்சார் விடயங்களில் இந்தியாவின் முறையான வகிபங்கை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.