கிளிநொச்சியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பொன்னகர் பகுதியில், வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை டிப்பர் ரக வாகனம் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் நேற்றையதினம்(12) இரவு இடம்பெற்றதுடன், இவ்விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த வீதியானது கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு போதிய இடவசதி குறைவான நிலையில், டிப்பர் வாகனங்கள் அதிகளவில் குறித்த வீதியை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.