தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் தாயார் கொழும்பில் இன்று(27) காலமானார்.
கொழும்பு – தெஹிவளையில் அமைந்துள்ள தனது மகளின் இல்லத்தில் இன்று (27.02.2024) மதியம் 1.30 மணியளவில் சுமந்திரனின் தாயாரான 85 வயதுடைய புஷ்பராணி மதியாபரணன் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதுகுத்தண்டு சத்திர சிகிச்சையின் பின்னர் கடந்த இரண்டு வருட காலமாக சுகயீனமாக இருந்த அவர், இன்று உலகை விட்டுப் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளை இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
சுமந்திரனின் தந்தை யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்தவர் என்பதுடன் தாயார் குடத்தனை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.