உயிர் காக்கும் மருந்தான Human immunoglobulin மருந்திற்குள் செலைன் நிரப்பி கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சராசரியாக ஒரு குப்பியின் விலை 30000 – 50000 இலங்கை ரூபாவாக இருக்கும்.
மனித குருதியை கொண்டு தயாரிக்கப்படுகின்ற Human immunoglobulin எனும் என்ற உயிர் காக்கும் ஊசி மருந்து 22,500 குப்பிகளிற்கு முன்பதிவு செய்யப்பட்டு அதில் 5000ற்கும் மேற்பட்டவை மருத்துவ வினியோக பிரிவிற்கு வளங்கப்பட்டுள்ளது.
இதற்காக சுமார் 4 மில்லியன் அமேரிக்க டொலர் மக்கள் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் பாரதூரமான விடயம் என்னவெனில், இம்மருந்தானது எதுவித சட்டபூர்வமான அனுமதியுமின்றி இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அவசர கொள்வனவு எனும் அடிப்படையில் பதிவிலிருந்து விடுவிக்கப்பட்டு பெறப்பட்டுள்ள இம் மருந்திற்கான அனுமதியை பெற கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களும் போலியானவை என தேசிய ஓளடதங்கள் ஒழுங்குபடுத்தும் சபை தெரிவித்துள்ளது.
இம்மருந்தை வினியோகித்த இந்திய நிறுவனத்திற்கு இலங்கையில் இம் மருந்தினை தயாரிக்க எதுவித சட்டபூர்வ அனுமதியும் வளங்கப்படவில்லை.
இவ்வாறான பின்புலத்திலேயே இம்மருந்தானது மருத்துவ வினியோக பிரிவுகளிற்கும் வைத்தியசாலைகளிற்கும் வளங்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையில் உயிருக்கு ஆபத்தான ஊழல்கள் குறித்து மருத்துவ சமூகம் தீவிர கவலையை வெளிப்டுத்தியுள்ள நிலையில் இலங்கைக்கு எங்கிருந்து எப்படி இந்த மருந்துகள் வந்தன என்பதைச் சரிபார்க்காமல், உணர்திறன் மிக்க மனித இம்முனோகுளோபுலின் ஊசிகளின் ஒரு பகுதி , மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளமை மனித உயிர்களோடு விழையாடும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகின்றது.
குறித்த மருந்தின் பேக்கேஜிங்கில் மும்பை தொலைபேசி எண்ணுடன் குஜராத்தில் உள்ள முகவரி ஒன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய இடங்களில் குறித்த மருந்தினை பாவித்து பாதகமான பக்கவிழைவுகள் பதிவாகிய போதுதான், அரசு மருத்துவமனைகளில் விநியோகிக்கப்பட்ட மனித இம்முனோகுளோபுலின் 5- கிராம் குப்பிகள் குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை மருத்துவப் பொருட்கள் பிரிவு (MSD) மூலம் குறித்த மருந்தானது பயன்படுத்தலுக்காக பல வைத்தியசாலைகளிற்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) மூன்று தனித்தனி புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேகத்திற்குரிய இறக்குமதியில் மருந்தினை பாவித்து ஒவ்வாமை ஏற்படவில்லை என்றால், குப்பிகளின் முழு இறக்குமதியும் அதாவது 22,500 குப்பிகளும் வாங்கப்பட்டிருக்கும்.
இந்த இம்யூனோகுளோபுலின் குப்பிகள் எங்கிருந்து வந்தன அல்லது அவற்றின் உள்ளடக்கங்களை யார் தயாரித்தார்கள் என்பது மூத்த அதிகாரிகளுக்கு இன்னும் தெரியவில்லை. இதனுள் செலைன் நிரப்பப்பட்டிருக்கலாம் என சுகாதார அமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
மருதுகள் வேறாகவும் குப்பிகள் வேறாகவும் தனிதனி மருந்துகளாக கடத்தப்பட்டிருக்கலாம், இதன் மூலம் குளிர் சங்கிலியை பேணாமல் நோயாளிகளுக்கு பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் ஒருவர் கூறினார்.
அல்லது, உள்ளூர் சப்ளையர் ஆன சீதுவை சார்ந்த Isloez Biotech PharmaAG Ltd.- இங்கு மருந்தை தயாரித்திருக்கலாம் அல்லது கலவை செய்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
குஜராத்தைச் சேர்ந்த இந்திய நிறுவனத்தால் இம்யூனோகுளோபுலின் தயாரிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம், எம்எஸ்டி மற்றும் என்எம்ஆர்ஏ ஆவணங்கள் கூறுகின்றன. இது பொய் என தற்போது உறுதியாகியுள்ளது.
இலங்கையில் உள்ள உத்தியோகபூர்வ ஆவணங்களில், இந்திய நிறுவனத்தின் பெயர் ‘Livealth Bio Prescription drugs Pvt Ltd’ மற்றும் ‘Livealth Biopharmas (Pvt) Ltd’ ன குறிபிடப்பட்டுள்ளது.
பிரச்சனைக்குரிய இம்யூனோகுளோபுலின் குப்பிகளில் , ‘Livealth Bio pharma [sic] (PVT) Ltd’ என்று எழுதப்பட்ட லேபிள்களே இருந்தன.
இதேவேளை குறித்த லைவ்வல்த் பயோஃபார்மா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தொடர்புகொண்டு வினாவிய போது குறித்த மருந்தை தாம் உற்பத்தி செய்யவில்லை என்றும் மனித இம்யூனோகுளோபுலின் தயாரிக்க தம்மிடம் உரிமம் கூட இல்லை என்று கூறி, இந்த இறக்குமதியுடன் எந்த தொடர்பும் இல்லை என்று ஒரு பிரதிநிதி திட்டவட்டமாக மறுத்தார்.
மேலும் “இந்த தயாரிப்புகள் எங்கள் நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்படவில்லை அல்லது வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க,” என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார். அத்தோடு, இந்த தயாரிப்புகளை நாங்கள் இதுவரை எந்த தரப்பினருக்கும் உற்பத்தி செய்யவில்லை, வழங்கவில்லை அல்லது ஏற்றுமதி செய்யவில்லை.” மனித இம்யூனோகுளோபுலின் எமது விளம்பரப்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியலில் கூட இல்லை. மேலும் இந்த மருந்து இந்தியாவில் மூன்று முதல் நான்கு நிறுவனங்களால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்றார்.
தற்போது NMRA இன் பாதுகாப்பு மற்றும் இடர் மதிப்பீட்டு துணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மனித இம்யூனோகுளோபுலின் IV 5-g குப்பிகளை உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு MSD ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
வெறும் பணத்திற்காக உயிர்காக்கும் துறைக்குள்ளும் கலப்படங்கள் மூலம் போலியான மருந்துகளை வினியோகித்து மக்கள் உயிரினை கொல்லாமல் கொல்லும் இவர்களை என்னவென்று சொல்வது???