Tag: அவுஸ்திரேலிய
வடக்கு மாகாண ஆளுநருடன் அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம் கலந்துரையாடல்
சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்பகட்ட கள ஆய்வில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை நேற்று (11.03.2024) மாலை சந்தித்து கலந்துரையாடினர். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் பொருளாதார துறையின் முதலாம் நிலை செயலாளரின் தலைமையில் குறித்த நிபுணர்கள் குழாம் கௌரவ ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண மக்களின் தற்போதைய வாழ்வியல் செயற்பாடுகள், பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுலாத்துறை, உட்கட்டமைப்பு வசதிகள், சமுத்திர பாதுகாப்பு, கடற்றொழில் செயற்பாடுகள், கண்ணிவெடி அகற்றுதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம், கௌரவ ஆளுநரிடம் கேட்டறிந்துக்கொண்டனர்.
அவுஸ்திரேலிய பெண் மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி
மசாஜ் சேவையை பெற்றுக்கொள்ள சென்ற அவுஸ்திரேலிய பெண் பிரஜையொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்க முயற்சித்ததாக கூறப்படும் நபர் தொடர்பில் குறித்த அவுஸ்திரேலியா பெண் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து கண்டிக்குச் செல்லும் வீதியில் கடுகண்ணாவை என்னும் பிரதேசத்தில் இயங்கும் மசாஜ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (09) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும். அதன் பின்னர் கடுகண்ணாவை பிரதேசத்தில் இருந்து நுவரெலியாவிற்கு வருகை தந்து நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தனது முறைப்ப்பாட்டினை செய்துள்ளதாக பொலிஸார் […]
அவுஸ்திரேலிய தூதரகத்திற்கு ஜனாதிபதி விஜயம்.!
7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவுஸ்ரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு நேற்று (10) விஜயம் செய்தார். தூதரகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை கொன்சல் ஜெனரல் கலாநிதி ரொஷ் ஜலக்கே மற்றும் திருமதி பிரியங்கா கமகே ஆகியோர் வரவேற்றனர். அதன் பின்னர், கொன்சல் ஜெனரல் மற்றும் ஊழியர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடியதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் அவர்கள் ஆற்றக்கூடிய செயலூக்கமான […]