Tag: ஆசிரியர்களுக்கு
மேலதிக வகுப்புக்கள் நடத்திய அதிபர் ஆசிரியர்களுக்கு நேர்ந்த கதி..!
மத்திய மாகாணத்தில் மாணவர்களுக்கு கட்டணம் அறவிடப்பட்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களுக்குத் தடை விதித்திருந்த போதிலும் அதையும் மீறி சொந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை ஏற்பாடு செய்யதாகக் கூறும் மேற்படி மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர் உட்பட 58 ஆசிரியர்களை வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கினிகத்தேன ஆரம்பப் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர், ஆசிரியர்களுக்கு வழங்கிய சுற்றறிக்கை தமக்கு செல்லுபடியாகாது எனக் கூறி, பணத்திற்காக தனது பாடசாலையின் பிள்ளைகளுக்கு […]
ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்
ஆசிரியர்களுக்குப் பணம் வசூலித்து பரிசுகளை வழங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு பரிசு வழங்குவதை தடை செய்து சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதுடன் இது போன்ற பரிசுகளை ஆசிரியர்கள் பெறுவதும் தவறு என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கு பரிசு கொடுத்தால் தண்டனை
பணத்தை சேரித்து ஆசிரியர்களுக்கு பரிசு பொருட்களை வழங்குபவர்கள் சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆசிரியர்களுக்கு பரிசு பொருட்களை வழங்க தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படியான சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அவ்வாறு பரிசு வழங்கினால் இனிமேல் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணித்துள்ளார்.
அம்பாறை ஆசிரியர்களுக்கு இடமாற்றமில்லை
கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள ஆசிரிய இடமாற்ற விடயம் தொடர்பில் மீண்டும் ஜனாதிபதி செயலாளரை சந்தித்து கலந்துரையாடி கிழக்கு ஆளுநருடன் பேசி இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அம்பாறை மாவட்ட ஆசிரியர்கள் யாரும் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளடங்கலாக எந்த மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட மாட்டாது என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.